Jump to content

உலகலாவிய நடத்தை விதிமுறைகள்/அமலாக்க வழிமுறைகள்

From Wikimedia Foundation Governance Wiki
This page is a translated version of the page Policy:Universal Code of Conduct/Enforcement guidelines and the translation is 95% complete.
Outdated translations are marked like this.
Wikimedia Foundation Universal Code of Conduct

1. UCoC அமலாக்க வழிகாட்டுதல்கள்

இந்த அமலாக்க வழிகாட்டுதல்கள், சமூகம் மற்றும் Wikimedia Foundation எவ்வாறு உலகளாவிய நடத்தை விதிகளின் (Universal Code of Conduct, UCoC) இலக்குகளை அடைய முடியும் என்பதை விவரிக்கிறது. இதில் பின்வருவன பற்றி காணலாம். UCoC பற்றிய புரிதலை ஊக்குவித்தல், விதிமீறல்களைத் தடுக்கும் செயலில் ஈடுபடுதல், UCoC விதிமீறல்களுக்குப் பதிலளிக்கும் பணிக்கான கொள்கைகளை உருவாக்குதல் மற்றும் உள்ளூர் அமலாக்கக் கட்டமைப்புகளை ஆதரித்தல்.

UCoC அனைத்து ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் Wikimedia இடங்களுக்கும் பொருந்தும். எனவே, UCoC -ஐ அமல்படுத்துவது ஒரு நம் அனைவரது பொறுப்பாகும். இணை அமைப்பின் இயக்க மதிப்புக்கு ஏற்ப, இது சாத்தியமான உள்ளூர் மட்டத்தில் செய்யப்பட வேண்டும்.

அமலாக்க வழிகாட்டுதல்கள், தற்போதைய மற்றும் எதிர்கால அமலாக்க கட்டமைப்புகளின் தொடர்புக்கு வழி வகுக்கின்றன. UCoC-இன் சமமான மற்றும் நிலையான செயலாக்கத்திற்கான அடித்தளத்தை உருவாக்க முயல்கின்றன.

1.1 UCoC அமலாக்க வழிகாட்டுதல்களின் மொழிபெயர்ப்புகள்

UCoC அமலாக்க வழிகாட்டுதல்களின் மூலப்பதிப்பு ஆங்கிலத்தில் உள்ளது. இது Wikimedia திட்டப்பணிகளில் பயன்படுத்தப்படும் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும். ஆங்கிலப் பதிப்புக்கும் மொழிபெயர்ப்பிற்கும் இடையே ஏதேனும் வித்தியாசம் இருந்தால், ஆங்கிலப் பதிப்பின் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்படும்.

1.2 UCoC UCoC அமலாக்க வழிகாட்டுதல்கள் மற்றும் UCoC மீதான மதிப்பாய்வு

அறங்காவலர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், அமலாக்க வழிகாட்டுதல்கள் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, UCoC அமலாக்க வழிகாட்டுதல்கள் மற்றும் UCoC பற்றிய சமூக ஆலோசனை மற்றும் மதிப்பாய்வை Wikimedia Foundation நடத்தும்.

2. முன்கூட்டியே தடுத்தல் செயல்

Wikimedia சமூகங்கள் மற்றும் அதனுடன் இணைந்த தனிநபர்கள் UCoC பற்றி விழிப்புடன் இருக்கவும், அதை முழுமையாகப் புரிந்து கொள்ளவும், பின்பற்றவும் வழிகாட்டுதல்களை வழங்குவதை இந்தப் பகுதி நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்த நோக்கத்திற்காக, UCoC பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், UCoC-இன் மொழிபெயர்ப்புகளைக் கையாளுதல் மற்றும் பொருத்தமான அல்லது தேவையான இடங்களில் UCoC-ஐ தன்னார்வமாக பின்பற்றுவதை ஊக்குவிப்பதற்கான பரிந்துரைகளை இந்தப் பிரிவு விவரிக்கும்.

2.1 UCoC -இன் அறிவிப்பு மற்றும் உறுதிப்படுத்தல்

Wikimedia திட்டப்பணிகளில் தொடர்பு கொள்பவர்கள் மற்றும் பங்களிப்பவர்கள் அனைவருக்கும் UCoC பொருந்தும். இது உலகளாவிய Wikimedia திட்டப்பணிகளில் ஒத்துழைப்புக்கான நடத்தையின் அடிப்படையாக, உத்தியோகபூர்வ, தனிப்பட்ட நிகழ்வுகள் மற்றும் மூன்றாம் தரப்பு தளங்களில் ஹோஸ்ட் செய்யப்படும் தொடர்புடைய இடங்களுக்கும் பொருந்தும்.

Wikimedia பயன்பாட்டு விதிமுறைகளில் UCoC ஐ சேர்க்க பரிந்துரைக்கிறோம்.

கூடுதலாக, பின்வரும் நபர்கள் UCoCஐப் பின்பற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும்:

  • * அனைத்து Wikimedia Foundation பணியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், Wikimedia இணை குழு உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள்;
  • Wikimedia-இன் இணை அமைப்பு அல்லது ஆர்வமுள்ள Wikimedia இணை அமைப்பின் எந்தவொரு பிரதிநிதியும் (Wikimedia ஸ்பான்சர் செய்யும் நிகழ்வு, குழு, ஆய்வை, ஒரு ஆராய்ச்சி அமைப்பில் wiki-க்கு உள்ளே அல்லது wiki-க்கு வெளியே ஊக்குவிக்க மற்றும்/அல்லது ஒத்துழைக்க விரும்பும் தனிநபர், அல்லது தனிநபர்களின் குழு); மற்றும்
  • Wikimedia Foundation வர்த்தக முத்திரையைப் பயன்படுத்த விரும்பும் எந்தவொரு தனிநபரும், Wikimedia வர்த்தக முத்திரைகளுடன் முத்திரையிடப்பட்ட நிகழ்வுகள் (நிகழ்வின் தலைப்பில் அவற்றைச் சேர்ப்பது போன்றவை) மற்றும் Wikimedia அமைப்பு, சமூகம் அல்லது திட்டப்பணியின் பிரதிநிதித்துவ நிகழ்வு (ஒரு தொகுப்பாளர் அல்லது பூத் ஆபரேட்டர் போன்றர்கள், போன்ற அனைவரும்).

2.1.1 UCoC விழிப்புணர்வை ஊக்குவித்தல்

விழிப்புணர்வை மேம்படுத்தும் பொருட்டு, UCoC-க்கான இணைப்பு இங்கு அணுகக்கூடியதாக இருக்கும்:

  • பயனர் மற்றும் நிகழ்வு பதிவு பக்கங்கள்;
  • Wikimedia திட்டப்பணிகளில் அடிக்குறிப்புகள் மற்றும் வெளியேறிய பயனர்களுக்கான உறுதிப்படுத்தல் பக்கங்களைத் திருத்தவும் (பொருத்தமான மற்றும் தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமான இடங்களில்);
  • அங்கீகரிக்கப்பட்ட துணை நிறுவனங்கள் மற்றும் பயனர் குழுக்களின் இணையதளங்களில் அடிக்குறிப்புகள்;
  • நேரில், தொலைதூர மற்றும் இரண்டும் கலந்த நிகழ்வுகளில்.
  • உள்ளூர் திட்டப்பணிகள், துணை நிறுவனங்கள், பயனர் குழுக்கள் மற்றும் நிகழ்வு அமைப்பாளர்களால் வேறு எங்கும் பொருத்தமானதாகக் கருதப்படும் இடங்கள் அனைத்திலும்.

2.2 UCoC பயிற்சிக்கான பரிந்துரைகள்

UCoC பற்றிய பொதுவான புரிதல் மற்றும் அதை செயல்படுத்துவதற்கான திறன்களை வழங்குவதற்காக, U4C கட்டமைப்புக் குழு, Wikimedia Foundation -இன் ஆதரவுடன், பயிற்சியை உருவாக்கி செயல்படுத்தும். பயிற்சியின் வளர்ச்சியில் தொடர்புடைய பங்குதாரர்கள் கலந்தாலோசிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது, இவர்கள் உள்பட, ஆனால் இவர்கள் மட்டுமே கிடையாது: UCoC-இன் முழுமையான பார்வையை வழங்குவது நன்மை பய க்கும் எனக் கருதப்படுகின்ற இணை நிறுவனங்கள், இணைப்புக் குழு, நடுவர் குழுக்கள், முகமைப் பணியாளர்கள் மற்றும் பிற மேம்பட்ட உரிமைகளைக் கொண்டிருப்பவர்கள், T&S மற்றும் சட்டப்பூர்வ மற்றும் பிறர்.

இந்தப் பயிற்சிகள் UCoC அமலாக்கச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக இருக்க விரும்பும் நபர்களுக்காக அல்லது UCoC பற்றித் தெரிந்து கொள் விரும்புவோருக்கானவை.

பயிற்சியானது பொதுவான தகவல், விதிமீறல்கள் மற்றும் ஆதரவு மற்றும் சிக்கலான வழக்குகள் மற்றும் மேல்முறையீடுகளை அடையாளம் காணுகின்ற தனித்தனி தொகுதிகளாக அமைக்கப்படும். முதல் U4C ஆன்போர்ட் செய்யப்பட்ட பிறகு; தேவைக்கேற்ப பயிற்சி தொகுதிகளை பராமரித்து புதுப்பிப்பதற்கு அவர்கள் பொறுப்பு வகிப்பார்கள்.

பயிற்சி தொகுதிகள் வெவ்வேறு வடிவுருக்களிலும் வெவ்வேறு தளங்களிலும் எளிதாக அணுகும் வகையில் கிடைக்கப்பெறும். உள்ளூர் சமூகங்கள் மற்றும் Wikimedia இணை அமைப்புகள் தங்கள் சமூக அளவில் பயிற்சி அளிக்க விரும்பும் Wikimedia Foundation இலிருந்து பயிற்சியை செயல்படுத்த நிதியுதவி பெறுவார்கள். மொழிபெயர்ப்புகளுக்கான ஆதரவும் இதில் அடங்கும்.

ஒரு தொகுதியை நிறைவு செய்யும் பங்கேற்பாளர்களுக்கு தாங்கள் நிறைவுசெய்ததை பொதுவெளியில் அங்கீகரிக்கப்பட, ஒரு விருப்பத்தெரிவு அளிக்கப்படுவதை நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

பின்வரும் பயிற்சிகளின் தொகுப்புகள் முன்மொழியப்படுகின்றன:

தொகுதி A - அறிமுகம் (UCoC - பொது)

  • UCoC மற்றும் அதன் செயலாக்கம் பற்றிய பொதுவான புரிதலை உறுதிப்படுத்த உதவுகிறது
  • UCoC என்றால் என்ன, எந்த மாதிரியான அமலாக்கம் எதிர்பார்க்கப்படுகிறது, அத்துடன் விதிமீறல்களைப் புகாரளிக்க உதவும் கருவிகள் என்னென்ன என்பதை சுருக்கமாக விளக்குகிறது.

தொகுதி B - அடையாளம் மற்றும் புகார் அளித்தல் (UCoC - விதிமீறல்கள்)

  • UCoC விதிமீறல்களை இனம் காணவும், புகாரளித்தல் செயல்முறைகளைப் புரிந்து கொள்ளவும், புகாரளித்தல் முறைகளைப் பயன்படுத்துவது எப்படி என்ற அறிவை மக்களுக்கு அளிக்கும்
  • விதிமீறலின் வகைகள், அவற்றின் உள்ளூர் சூழலில் புகாரளிக்கக்கூடிய நிகழ்வுகளை எவ்வாறு கண்டறிவது, எப்படி, எங்கு அறிக்கைகளை உருவாக்குவது மற்றும் UCoC செயல்முறைகளில் உள்ள வழக்குகளை உகந்த முறையில் கையாளுதல் ஆகியவற்றை விவரிக்கும்
  • பயிற்சி UCoC-இன் குறிப்பிட்ட பகுதிகளான துன்புறுத்தல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றிலும் கவனம் செலுத்தும் (தேவைக்கேற்றவாறு).

தொகுதிகள் C - சிக்கலான வழக்குகள், மேல்முறையீடுகள் (UCoC - பலவிதமான விதிமீறல்கள், மேல்முறையீடுகள்)

  • இந்த தொகுதிகள் U4C-ல் சேர்க்கப்படுவதற்கு ஒரு முன்நிபந்தனையாகும், மேலும் சாத்தியமான U4C விண்ணப்பதாரர்கள் மற்றும் மேம்பட்ட உரிமைகள் வைத்திருப்பவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது
  • இந்த தொகுதி இரண்டு குறிப்பிட்ட தலைப்புகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்:
    • C1- சிக்கலான வழக்குகளைக் கையாளுதல் (UCoC - பலவிதமான விதிமீறல்கள்): cross- Wiki வழக்குகள், நீண்ட கால துன்புறுத்தல், அச்சுறுத்தல்களின் நம்பகத்தன்மையை கண்டறிதல், பயனுள்ள மற்றும் உணர்திறன் மிக்க தகவல் தொடர்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பிற பாதிக்கப்படக்கூடிய நபர்களின் பாதுகாப்பை உறுதிசெய்தல் ஆகியவற்றை விவரிக்கும்
    • C2 - மேல்முறையீடுகளைக் கையாளுதல், வழக்குகளை நிறைவு செய்தல் (UCoC - மேல்முறையீடுகள்): UCoC மேல்முறையீடுகளை கையாளுதலை விவரிக்கும்
  • இந்த தொகுதிகள் பயிற்றுவிப்பாளர் தலைமையிலான மற்றும் வடிவமைக்கப்பட்ட பயிற்சிகளாகும்; U4C உறுப்பினர்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள் மற்றும் பொது அல்லாத தனிப்பட்ட தரவுக் கொள்கைக்கான அணுகலில் கையெழுத்திட்ட சமூகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட செயல்பாட்டாளர்களுக்கு வழங்கப்படுகிறது
  • சாத்தியமாகும் இடங்களில், தனித்தனி தொகுதிகள், ஸ்லைடுகள், கேள்விகள் போன்ற இந்த பயிற்றுவிப்பாளர் தலைமையிலான பயிற்சிகளுக்கான பொருட்கள் பொதுவெளியில் கிடைக்கப்பெறும்

3. பதிலளிக்கக்கூடிய வேலை

இந்தப் பிரிவு UCoC விதிமீறல்களின் புகார் அறிக்கைகளைச் செயலாக்குவதற்கான வழிகாட்டுதல்களையும், கொள்கைகளை வழங்குவதையும், UCoC விதிமீறல்களைக் கையாளும் உள்ளூர் அமலாக்க அமைப்புகளுக்கான பரிந்துரைகளையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதற்காக, அறிக்கைகளைச் செயலாக்குவதற்கான முக்கியமான கொள்கைகள், புகார்களுக்கான கருவியை உருவாக்குவதற்கான பரிந்துரைகள், பல்வேறு நிலை விதிமீறல்களுக்கான பரிந்துரைக்கப்பட்ட அமலாக்கம் மற்றும் உள்ளூர் அமலாக்க அமைப்புகளுக்கான பரிந்துரைகள் ஆகியவற்றை இந்தப் பிரிவு விவரிக்கும்.

3.1 UCoC விதிமீறல்களை தாக்கல் செய்வதற்கும் செயலாக்குவதற்குமான கோட்பாடுகள்

பின்வரும் கொள்கைகளே, இயக்கம் முழுவதும் புகாரளித்தல் கட்டமைப்புகளுக்கான தரநிலைகளாகும்.

புகார் அறிக்கைகள்:

  • விதிமீறல் இலக்காக இருப்பவர், மற்றும் சம்பவத்தை அவதானித்த ஈடுபாடற்ற மூன்றாம் தரப்பினர், ஆகியோரால் UCoC விதிமீறல்களைப் புகாரளிப்பது சாத்தியப்படும்
  • புகார்கள் ஆன்லைனில் நடந்தாலும், ஆஃப்லைனில் நடந்தாலும், மூன்றாம் தரப்பினரால் ஹோஸ்ட் செய்யப்பட்ட ஸ்பேஸில் நடந்தாலும் அல்லது இடங்களின் கலவையாக இருந்தாலும் UCoC விதிமீறல்களை உள்ளடக்கும் திறன் கொண்டதாக இருக்கும்
  • அறிக்கைகள் கட்டாயம் பகிரங்கமாக அல்லது வேறுபட்ட தனியுரிமை அளவுகளில் செய்யப்பட வேண்டும்
  • ஆபத்து மற்றும் சட்டபூர்வமான தன்மையை சரியாக மதிப்பிட, குற்றச்சாட்டுகளின் நம்பகத்தன்மை மற்றும் சரிபார்ப்பு முழுமையாக ஆராயப்படும்
  • தவறான நம்பிக்கை கொண்ட அல்லது நியாயமற்ற அறிக்கைகளை தொடர்ந்து அனுப்பும் பயனர்கள் புகாரளிக்கும் சலுகைகளை இழக்க நேரிடும்
  • குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு, தங்களுக்கு எதிராக செய்யப்பட்டதாகக் கூறப்படும் விதிமீறலின் விவரங்களுக்கு அணுகல் இருக்கும், அத்தகைய அணுகலானது, புகாரளிப்பவர் அல்லது பிறரின் பாதுகாப்பிற்கு அபாயம் அல்லது தீங்கு விளைவிக்காத வரை
  • குறிப்பிடப்பட்ட தனிநபர்கள், அவர்களுக்கு நன்றாகத் தெரியாத மொழிகளில் அறிக்கைகள் வழங்கப்பட்டால், மொழிபெயர்ப்பிற்கான வளஆதாரங்களை Wikimedia Foundation கட்டாயம் வழங்கவேண்டும்

செயலாக்க விதிமீறல்கள்:

  • இறுதிமுடிவுகள், விதிமீறலின் தீவிரத்திற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும்
  • UCoC-இன் கொள்கைகளுக்கு இணங்க, சமச்சீரான சூழலைப் பயன்படுத்தி, தகவலறிந்த வழியில் வழக்குகள் தீர்ப்பளிக்கப்பட வேண்டும்
  • வழக்குகள் ஒரு சீரான காலக்கெடுவிற்குள் தீர்க்கப்பட வேண்டும், அது நீடித்தால் பங்கேற்பாளர்களுக்கு சரியான நேரத்தில் புதுப்பிப்புகள் வழங்கப்படவேண்டும்

வெளிப்படைத்தன்மை:

  • சாத்தியமான இடங்களில், UCoC விதிமீறலைக் கையாண்ட குழு, பொதுவானது-அல்லாத வழக்குகளில் தனியுரிமை மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்கின்ற அதே வேளையில், அந்த வழக்குகளின் ஒரு பொதுக் காப்பகத்தை அளிக்கும்
  • Wikimedia Foundation பிரிவு 3.2 -இல் முன்மொழியப்பட்ட மைய அறிக்கையிடல் கருவியின் பயன்பாடு பற்றிய அடிப்படை புள்ளிவிவரங்களை வெளியிடும், அதே நேரத்தில் குறைந்தபட்ச தரவு சேகரிப்பு மற்றும் தனியுரிமைக்கு மதிப்பளிக்கும் கொள்கைகளை மதிக்கும்.
    • UCoC விதிமீறல்களைக் கையாளும் பிற குழுக்கள், UCoC விதிமீறல்கள் பற்றிய அடிப்படைப் புள்ளிவிவரங்களை வழங்குவதற்கும், தங்களால் இயன்றவரை புகாரளிப்பதற்கும் ஊக்குவிக்கப்படுகின்றனர், அதே நேரத்தில் குறைந்தபட்ச தரவு சேகரிப்பு மற்றும் தனியுரிமைக்கு மதிப்பளிக்கும் கொள்கைகளும் மதிக்கப்படவேண்டும்.

3.1.1 வழக்குகளை விசாரிப்பதற்கான ஆதாரங்களை வழங்குதல்

உள்ளூர் நிர்வாக அமைப்புகளால் UCoC அமலாக்கம் பல வழிகளில் ஆதரிக்கப்படும். சமூகங்கள் பல காரணிகளின் அடிப்படையில் வெவ்வேறு வழிமுறைகள் அல்லது அணுகுமுறைகளில் இருந்து தேர்வு செய்ய முடியும்; அவை இவ்வாறானவை: அவற்றின் அமலாக்கக் கட்டமைப்புகளின் திறன், ஆளுகைக்கான அணுகுமுறை மற்றும் சமூக விருப்பத்தேர்வுகள். இந்த அணுகுமுறைகளில் உள்ளடங்குபவை:

  • ஒரு குறிப்பிட்ட Wikimedia திட்டப்பணிக்கான நடுவர் மன்றக் குழு (ArbCom).
  • பல Wikimedia திட்டப்பணிகளில் ArbCom பகிரப்பட்டது
  • மேம்பட்ட உரிமைகள் வைத்திருப்பவர்கள் பரவலாக்கப்பட்ட முறையில் UCoC உடன் இணக்கமான உள்ளூர் கொள்கைகளை செயல்படுத்துவர்
  • உள்ளூர் நிர்வாகிகளின் குழு, கொள்கைகளைச் செயல்படுத்துவர்
  • உள்ளூர் பங்களிப்பாளர்கள் சமூக கலந்துரையாடல் மற்றும் ஒப்பந்தம் மூலம் உள்ளூர் கொள்கைகளை செயல்படுத்துவர்

UCoC உடன் முரண்படாத சமூகங்கள், ஏற்கனவே உள்ள வழிமுறைகளின் மூலம் அமலாக்கத்தைத் தொடர்ந்து கையாள வேண்டும்.

3.1.2 விதிமீறல்களின் வகையின் படியான அமலாக்கம்

இந்தப் பிரிவு, பல்வேறு வகையான விதிமீறல்களின் முழுமையற்ற பட்டியலையும், அது தொடர்பான சாத்தியமான அமலாக்க வழிமுறையையும் விவரிக்கிறது.

  • எந்தவிதமான உடல்ரீதியான வன்முறை அச்சுறுத்தல்களையும் உள்ளடக்கிய விதிமீறல்கள்
    • Wikimedia Foundation மற்றும் பாதுகாப்புக் குழுவால் கையாளப்படுபவை
  • வழக்கு அல்லது சட்ட அச்சுறுத்தல்களை உள்ளடக்கிய விதிமீறல்கள்
    • வழக்குகள் Wikimedia Foundation -இன் சட்டக் குழுவிற்கு விரைவாக அனுப்பப்பட வேண்டும், அல்லது பொருத்தமான போது, அச்சுறுத்தல்களின் தகுதியை சரியான முறையில் மதிப்பிடக்கூடிய பிற நிபுணர்களுக்கு அனுப்பப்பட்டவை
  • தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவலை ஒருமித்த கருத்துக்கு கொண்டிருக்காத வெளிப்படுத்தல் சம்பந்தப்பட்ட விதிமீறல்கள்
    • பொதுவாக கண்காணிப்பு அல்லது திருத்தம் மேற்கொள்வதை அடக்கும் அனுமதி கொண்ட பயனர்களால் கையாளப்படுபவை
    • அவ்வப்போது நம்பிக்கை மற்றும் பாதுகாப்புக் குழு மூலம் கையாளப்படுபவை
    • Wikimedia Foundation -இன் சட்டக் குழுவிற்கு அனுப்பப்பட்டவை அல்லது பொருத்தமான போது, இந்த வகையான மீறல் சட்டப்பூர்வக் கடமையைத் தூண்டினால், வழக்கின் தகுதியை மதிப்பிடக்கூடிய பிற நிபுணர்களுக்கு அனுப்பப்பட்டவை
  • இணை அமைப்பு நிர்வாகத்துடன் தொடர்புடைய விதிமீறல்கள்
    • இணைப்புக் குழுவால் அல்லது சமமான அமைப்பால் கையாளப்படுபவை
  • தொழில்நுட்ப இடங்களில் விதிமீறல்கள்
    • தொழில்நுட்ப நடத்தைக் குழுவால் கையாளப்படுகிறது
  • UCoC ஐப் பின்பற்றுவதில் அமைப்பு ரீதியான தோல்வி
    • U4C ஆல் கையாளப்படுகிறது
    • அமைப்பு ரீதியான தோல்விக்கான சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:
      • UCoC ஐ செயல்படுத்த உள்ளூர் திறன் இல்லாமை
      • UCoC உடன் முரண்படும் எப்போதுமேயான உள்ளூர் முடிவுகள்
      • UCoC ஐ அமல்படுத்த மறுப்பது
      • வளங்கள் இல்லாமை அல்லது பிரச்சினைகளைத் தீர்க்க விருப்பமின்மை
  • wiki-இல் UCoC விதிமீறல்கள்
    • பல wiki-களில் நடக்கும் UCoC விதிமீறல்கள்:
      • உலகளாவிய முறைமைச் செயற்படுத்துனர் மற்றும் முகமைப் பணியாளர்கள் மற்றும் ஒற்றை wiki UCoC விதிமீறல்களைக் கையாளும் அமைப்புகள் அல்லது U4C ஆல் கையாளப்படுபவை, அவை இந்த வழிகாட்டுதல்களுடன் முரண்படாத வரையில்.
    • ஒரு wiki-ல் நடக்கும் UCoC விதிமீறல்கள்:
      • ஏற்கனவே உள்ள வழிகாட்டுதல்களின்படி, ஏற்கனவே உள்ள அமலாக்க அமைப்புகளால் கையாளப்படுபவை, அவை இந்த வழிகாட்டுதல்களுடன் முரண்படாத வரையில்.
  • wiki-க்கு வெளியே உள்ள விதிமீறல்கள்
    • உள்ளூர் நிர்வாக அமைப்பு இல்லாத U4C -ஆல் கையாளப்படுபவை (எ.கா. ArbCom) , அல்லது அந்த வழக்கு அமலாக்க அமைப்பால் அவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டால், அது இல்லையெனில் பொறுப்பாகும்
    • சில சந்தர்ப்பங்களில், wiki -க்கு வெளியே உள்ள விதிமீறல்களை, சம்பந்தப்பட்ட wiki-க்கு வெளியே உள்ள இடத்தின் அமலாக்க அமைப்புகளுக்குப் புகாரளிப்பது உதவியாக இருக்கும். தற்போதுள்ள உள்ளூர் மற்றும் உலகளாவிய அமலாக்க வழிமுறைகள் அறிக்கைகளில் செயல்படுவதை இது தடுக்காது
  • தனிப்பட்ட நிகழ்வுகள் மற்றும் இடங்களில் விதிமீறல்கள்
    • தற்போதுள்ள அமலாக்க கட்டமைப்புகள் அடிக்கடி நடத்தை விதிகள் மற்றும் Wiki -க்கு வெளியே உள்ள இடங்களில் அமலாக்கத்தை வழங்குகின்றன. நட்பான இடத்திற்கான கொள்கைகள் மற்றும் மாநாட்டு விதிகள் ஆகியவை இதில் அடங்கும்
    • இந்த வழக்குகளை கையாளும் அமலாக்க கட்டமைப்புகள் அவற்றை U4C -க்கு பரிந்துரைக்கலாம்
    • Wikimedia Foundation -ஆல் நடத்தப்படும் நிகழ்வுகளின் நிகழ்வுகளில், நம்பிக்கையும் பாதுகாப்புமே நிகழ்வு கொள்கை அமலாக்கத்தை வழங்குகிறது

3.2 புகார் அறிக்கையிடல் கருவிக்கான பரிந்துரைகள்

UCoC விதிமீறல்களுக்கான மையப்படுத்தப்பட்ட புகாரளித்தல் மற்றும் செயலாக்கக் கருவியானது, Wikimedia Foundation ஆல் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படும். இந்தக் கருவியைக் கொண்டு MediaWiki மூலம் அறிக்கைகளை உருவாக்க முடியும். UCoC விதிமீறல்களைப் புகாரளிப்பதிலும் செயலாக்குவதிலும் தொழில்நுட்பத் தடையைக் குறைப்பதே இதன் நோக்கமாகும்.

அறிக்கைகள், தொடர்புடைய அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியிருக்க வேண்டும் அல்லது வழக்கின் ஆவணப் பதிவை வழங்க வேண்டும். புகார் அறிக்கையிடல் இடைமுகம் அந்த குறிப்பிட்ட வழக்கைச் செயலாக்குவதற்குப் பொறுப்பானவருக்கு விவரங்களை வழங்க அனுமதிக்க வேண்டும். பின் வரும் தகவல்கள் புகாரில் இருக்க வேண்டும்.

  • புகார் தரப்பட்ட நடத்தை UCoC -ஐ எவ்வாறு விதிமீறுகிறது
  • UCoC -இன் இந்த விதிமீறலால் யாருக்கு அல்லது என்ன பாதிப்பு ஏற்பட்டது
  • சம்பவம்(கள்) நிகழ்ந்த தேதி மற்றும் நேரம்
  • சம்பவத்தின் இடம்(கள்)
  • அமலாக்கக் குழுக்கள் விஷயத்தை சிறப்பாகக் கையாள அனுமதிக்கும் பிற தகவல்கள்

எளிதாகப் பயன்படுத்துதல், தனியுரிமை மற்றும் பாதுகாப்பு, செயலாக்கத்தில் நெகிழ்வுத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகிய கொள்கைகளின் கீழ் கருவி செயல்பட வேண்டும்.

UCoC ஐச் செயல்படுத்தும் பொறுப்பில் உள்ள நபர்கள் இந்தக் கருவியைப் பயன்படுத்தத் தேவையில்லை. எளிதாகப் பயன்படுத்துதல், தனியுரிமை மற்றும் பாதுகாப்பு, செயலாக்கத்தில் நெகிழ்வுத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை போன்ற அதே கொள்கைகளின்படி வழக்குகள் கையாளப்படும் வரை, அவர்கள் பொருத்தமானதாகக் கருதும் கருவிகளுடன் தொடர்ந்து பணியாற்றலாம்.

3.3 அமலாக்க கட்டமைப்புகளுக்கான கொள்கைகள் மற்றும் பரிந்துரைகள்

சாத்தியமான இடங்களில், UCoC விதிமீறல்கள் பற்றிய புகார்களைப் பெறுவதற்கும், இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி அவற்றைக் கையாள்வதற்கும், ஏற்கனவே உள்ள அமலாக்கக் கட்டமைப்புகளை நாங்கள் ஊக்குவிக்கிறோம். UCoC -இன் அமலாக்கம் இயக்கம் முழுவதும் சீராக இருப்பதை உறுதிசெய்ய, UCoC விதிமீறல்களைக் கையாளும் போது பின்வரும் அடிப்படைக் கொள்கைகளைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறோம்.

3.3.1 செயல்பாட்டில் நேர்மை

தேவையான முரண் கொள்கைகளை உருவாக்கி பராமரிப்பதில் அமலாக்கக் கட்டமைப்புகளை நாங்கள் ஊக்குவிக்கிறோம். நிர்வாகிகள் அல்லது பிறர் சிக்கலில் நெருக்கமாக ஈடுபட்டிருக்கும் போது, புகார் அறிக்கையிலிருந்து எப்போது விலகி இருக்க வேண்டும் அல்லது விலக வேண்டும் என்பதைத் தீர்மானிக்க இவை உதவ வேண்டும்.

வழக்கமாக, எல்லாத் தரப்பினரும் பிரச்சனைகள் மற்றும் சான்றுகள் குறித்த தங்கள் கண்ணோட்டத்தை வழங்குவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள், மேலும் தகவல், கண்ணோட்டம் மற்றும் சூழலை வழங்குவதற்கு மற்றவர்களின் கருத்துகளையும் கோரலாம். தனியுரிமை மற்றும் பாதுகாப்பைக் காப்பதற்காக இது வரையறுக்கப்படலாம்.

3.3.2 செயல்முறையின் வெளிப்படைத்தன்மை

4.1-ல் வரையறுக்கப்பட்டுள்ளபடி U4C அதன் நோக்கம் மற்றும் பரவல் எல்லைக்கு ஏற்ப, UCoC அமலாக்க நடவடிக்கைகளின் செயல்திறன் மற்றும் இயக்கம் முழுவதும் பொதுவான விதிமீறல்கள் தொடர்பான ஆவணங்களை வழங்க வேண்டும். இந்த ஆராய்ச்சியை மேற்கொள்வதில் அவர்களுக்கு Wikimedia Foundation ஆதரவளிக்க வேண்டும். UCoC ஐச் செயல்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகளை மேம்படுத்துவதில் அமலாக்கக் கட்டமைப்புகளுக்கு உதவுவதே இந்த ஆவணப்படுத்தலின் குறிக்கோள் ஆகும்.

Wikimedia திட்டப்பணிகள் மற்றும் இணை நிறுவனங்கள், முடிந்தால், UCoC கொள்கை உரைக்கு ஏற்ப கொள்கைகள் மற்றும் அமலாக்க வழிமுறைகளை கோடிட்டுக் காட்டும் பக்கங்களை பராமரிக்க வேண்டும். UCoC கொள்கை உரைக்கு முரணான தற்போதைய வழிகாட்டுதல்கள் அல்லது கொள்கைகளுடன் கூடிய திட்டப்பணிகள் மற்றும் இணை நிறுவனங்கள் உலகளாவிய சமூகத் தரங்களுக்கு இணங்க மாற்றங்களைப் பற்றி கலந்துரையாட வேண்டும். புதிய உள்ளூர் கொள்கைகளை புதுப்பித்தல் அல்லது உருவாக்குதல் UCoC உடன் முரண்படாத வகையில் செய்யப்பட வேண்டும். புதிய கொள்கைகள் அல்லது வழிகாட்டுதல்களைப் பற்றி U4C-இல் இருந்து திட்டப்பணிகள் மற்றும் இணை நிறுவனங்கள் ஆலோசனைக் கருத்துக்களைக் கோரலாம்.

மூன்றாம் தரப்பு தளங்களில் (எ.கா. டிஸ்கார்ட், டெலிகிராம், முதலியன) ஹோஸ்ட் செய்யப்பட்ட தொடர்புடைய இடத்தில் நிகழும் Wikimedia சார்ந்த உரையாடல்களுக்கு, Wikimedia -வின் பயன்பாட்டு விதிமுறைகள் பொருந்தாது. அவை குறிப்பிட்ட இணையதளத்தின் பயன்பாட்டு விதிமுறைகள் மற்றும் நடத்தைக் கொள்கைகளைக் கொண்டிருக்கும். இருப்பினும், மூன்றாம் தரப்பு தளங்களில் ஹோஸ்ட் செய்யப்பட்ட தொடர்புடைய இடத்தில் Wikimedia நடத்தை, UCoC விதிமீறல்கள் பற்றிய அறிக்கைகளில் சான்றாக ஏற்கப்படலாம். மூன்றாம் தரப்பு தளங்களில் Wikimedia தொடர்பான இடங்களை நிர்வகிக்கும் Wikimedia சமூக உறுப்பினர்கள் தங்கள் கொள்கைகளில் UCoC -க்கான மதிப்பை இணைக்க ஊக்குவிக்கிறோம். Wikimedia Foundation ஆனது மூன்றாம் தரப்பு தளங்களுக்கான சிறந்த நடைமுறைகளை ஊக்குவிக்க முற்பட வேண்டும், அது அவர்களின் இடங்களில் Wiki -இல் மோதல்களைத் தொடர்வதை ஊக்கப்படுத்துகிறது.

3.3.3 மேல்முறையீடுகள்

தனித்தனியான முன்னோடியான உரிமைகள் கொண்டிருப்பவரால் எடுக்கப்பட்ட நடவடிக்கையானது U4C அல்லாத உள்ளூர் அல்லது பகிரப்பட்ட அமலாக்கக் கட்டமைப்பிற்கு மேல்முறையீடு செய்யப்படக்கூடியதாக இருக்கும். அத்தகைய அமலாக்க அமைப்பு இல்லை என்றால், U4C -க்கு மேல்முறையீடு அனுமதிக்கப்படலாம். இந்த ஏற்பாட்டைத் தவிர, உள்ளூர் சமூகங்கள் வேறு தனித்தனி முன்னோடியான உரிமைகள் கொண்டிருப்பவருக்கு மேல்முறையீடுகளை அனுமதிக்கலாம்.

அமலாக்க கட்டமைப்புகள் தொடர்புடைய சூழ்நிலை தகவல் மற்றும் தணிக்கும் காரணிகளின் அடிப்படையில் மேல்முறையீடுகளை ஏற்றுக்கொள்வதற்கும் பரிசீலிப்பதற்கும் தரநிலைகளை அமைக்கும். பின்வருபவை இந்தக் காரணிகளில் அடங்குபவை, ஆனால் அவை மட்டுமே கிடையாது: குற்றச்சாட்டுகளின் சரிபார்ப்பு, தண்டனையின் அளவு மற்றும் விளைவு மற்றும் அதிகார துஷ்பிரயோகம் அல்லது பிற புரையோடிப்போன சிக்கல்கள் குறித்த சந்தேகம் உள்ளதா என்பது மற்றும் மேற்கொண்டு விதிமீறல்களுக்கான சாத்தியக்கூறு. மேல்முறையீட்டை ஏற்றுக்கொள்வதற்கான உத்தரவாதம் இல்லை.

Wikimedia Foundation -இன் சட்டத் துறையால் எடுக்கப்பட்ட சில முடிவுகளுக்கு எதிராக மேல்முறையீடுகள் சாத்தியமில்லை. இருப்பினும், சில Wikimedia Foundation அலுவலக நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள் வழக்கு மீளாய்வுக் குழுவால் மதிப்பாய்வு செய்யக்கூடியதாக இருக்கும். சட்டத் தேவைகள் வேறுபட்டால், குறிப்பாக அலுவலக நடவடிக்கைகள் மற்றும் முடிவுகளின் மேல்முறையீடுகளுக்கான வரம்பு சில அதிகார வரம்புகளில் பொருந்தாது.

மேல்முறையீட்டை வழங்குவதற்கு அல்லது நிராகரிப்பதற்கு ஒரு அடிப்படையை நிறுவ, அமலாக்க கட்டமைப்புகள், வழக்குகள் பற்றிய தகவலறிந்த செயல்முறைகளை நாட வேண்டும். சம்பந்தப்பட்ட நபர்களின் தனியுரிமை மற்றும் முடிவெடுக்கும் செயல்முறை ஆகியவற்றில் அக்கறையுடன் தகவல் கையாளப்பட வேண்டும்.

இந்த இலக்கை அடைய, மேல்முறையீடுகளை மதிப்பாய்வு செய்யும் போது அமலாக்கக் கட்டமைப்புகள் வெவ்வேறு காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம். இவற்றில் பின்வருபவை அடங்கும், ஆனால் இவை மட்டும் அல்ல:

  • மீறலால் ஏற்படும் தீவிரம் மற்றும் தீங்கு
  • மீறல்களின் முந்தைய வரலாறுகள்
  • மேல்முறையீடு செய்யப்படும் மீறல்களின் தீவிரம்
  • மீறலுக்குப் பிறகானநேரம்
  • தொடர்பில் உள்ள விதிமீறலின் பகுப்பாய்வு
  • சாத்தியமான அதிகார துஷ்பிரயோகம் அல்லது பிற அமைப்பு ரீதியான சிக்கல் பற்றிய சந்தேகங்கள்

4. UCoC ஒருங்கிணைப்புக் குழு (U4C)

உலகளாவிய நடத்தை ஒருங்கிணைப்புக் குழு (U4C) என்ற புதிய உலகளாவிய குழு உருவாக்கப்படும். இந்தக் குழு மற்ற உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்புகளுடன் இணையான சம அமைப்பாக இருக்கும் (எ.கா. ArbComs மற்றும் AffCom). அதன் நோக்கம் UCoC -ஐ அமலாக்குவதில் உள்ளூர் குழுக்களின் பெரும் தோல்விகளுக்கு இறுதி உதவியாக செயல்படுவதாகும். U4C -இன் உறுப்பினர் தன்மை என்பது, நமது உலகளாவிய சமூகத்தின் உலகளாவிய மற்றும் மாறுபட்ட கட்டமைப்பைப் பிரதிபலிக்கும்.

4.1 குறிக்கோள் மற்றும் நோக்கம்

U4C, UCoC விதிமீறல்களின் அறிக்கைகளை கண்காணிக்கிறது, மேலும் கூடுதல் விசாரணைகளை மேற்கொள்ளலாம். பொருத்தமான இடங்களில் நடவடிக்கை எடுக்கலாம். U4C ஆனது UCoC அமலாக்கத்தின் நிலையை தொடர்ந்து கண்காணித்து மதிப்பிடும். Wikimedia Foundation மற்றும் சமூகம் கருத்தில் கொள்ள UCoC மற்றும் UCoC அமலாக்க வழிகாட்டுதல்களில் பொருத்தமான மாற்றங்களை பரிந்துரைக்கலாம், ஆனால் எந்த ஆவணத்தையும் அதன் சொந்தமாக மாற்ற முடியாது. தேவைப்படும்போது, U4C Wikimedia Foundation -க்கு வழக்குகளைக் கையாள உதவும்.

U4C:

  • அமலாக்க வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ள சூழ்நிலைகளில் புகார்கள் மற்றும் மேல்முறையீடுகளைக் கையாளுகிறது
  • கூறப்பட்ட புகார்கள் மற்றும் மேல்முறையீடுகளைத் தீர்ப்பதற்குத் தேவையான எந்த விசாரணைகளையும் செய்கிறது
  • UCoC சிறந்த நடைமுறைகளில் சமூகங்களுக்கு ஆதாரங்களை வழங்கவும், அதாவது கட்டாய பயிற்சி பொருள் மற்றும் தேவையான பிற ஆதாரங்கள்
  • சமூக உறுப்பினர்கள் மற்றும் அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து, தேவை ஏற்பட்டால், UCoC அமலாக்க வழிகாட்டுதல்கள் மற்றும் UCoC -இன் இறுதி விளக்கத்தை வழங்குகிறது.
  • UCoC அமலாக்கத்தின் செயல்திறனைக் கண்காணித்து மதிப்பிடுகிறது, மேலும் முன்னேற்றத்திற்கான பரிந்துரைகளை வழங்குகிறது

முதன்மையாக UCoC அல்லது அதன் அமலாக்கத்தின் விதிமீறல்கள் சம்பந்தப்படாத வழக்குகளை U4C எடுக்காது. கடுமையான முறையான சிக்கல்கள் தவிர, U4C அதன் இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தை வழங்கலாம். U4C -இன் பொறுப்புகள் 3.1.2-ல் மற்ற அமலாக்க அமைப்புகளின் பின்னணியில் விளக்கப்பட்டுள்ளன.

4.2 தேர்வு, உறுப்பினர் மற்றும் செயல்கள்

உலகளாவிய சமூகத்தால் ஏற்பாடு செய்யப்படும் வருடாந்திர தேர்தல்கள் வாக்களிக்கும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும். விண்ணப்பதாரர்கள் எந்தவொரு சமூக உறுப்பினராகவும் இருக்கலாம், ஆனால் பின்வரும் அளவுகோல்களும் கண்டிப்பாக இருக்க வேண்டும:

  • Wikimedia Foundation -இன் பொது அல்லாத தனிப்பட்ட தரவை அணுகுவதற்கான அளவுகோல்களை பூர்த்தி செய்து, தேர்தல் அறிக்கையில், அவர்கள் நிபந்தனைகளுக்கு முழுமையாக இணங்குவதை உறுதிப்படுத்தவும்
  • தற்போது எந்த Wikimedia திட்டப்பணியிலும் அனுமதிக்கப்படவோ அல்லது நிகழ்வு தடை செய்யப்படவோ கூடாது
  • UCoC உடன் இணங்கவும்
  • தேர்தல் செயல்பாட்டின் போது நிர்ணயிக்கப்பட்ட பிற தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

விதிவிலக்கான சூழ்நிலைகளில், ராஜினாமா அல்லது செயலற்ற தன்மை ஏற்பட்டு, கூடுதல் உறுப்பினர்களுக்கான உடனடித் தேவையை உருவாக்கிவிட்டதாகக் கண்டறிந்தால், U4C இடைக்காலத் தேர்தலை அழைக்கலாம். வழக்கமான வருடாந்திர தேர்தல்களைப் போன்றே தேர்தல்கள் இருக்கும்.

U4C -இன் தனிப்பட்ட உறுப்பினர்கள் மற்ற பதவிகளில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டியதில்லை (எ.கா. உள்ளூர் முறைமைச் செயற்படுத்துனர், ArbCom -இன் உறுப்பினர், நிகழ்வு பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர்). இருப்பினும், அவர்களின் மற்ற நிலைகளின் விளைவாக அவர்கள் நேரடியாக சம்பந்தப்பட்ட வழக்குகளை செயலாக்குவதில் அவர்கள் பங்கேற்க மாட்டார்கள். U4C -இன் உறுப்பினர்கள் பொது அல்லாத தனிப்பட்ட தரவுக் கொள்கைக்கான அணுகலில் கையெழுத்திடுவார்கள். U4C முதன்மைக் குழு, U4C உறுப்பினர்களுக்கு பொருத்தமான விதிமுறைகளை முடிவு செய்ய வேண்டும்.

U4C துணைக்குழுக்களை அமைக்கலாம் அல்லது குறிப்பிட்ட பணிகள் அல்லது செயல்களுக்குப் பொருத்தமான நபர்களை நியமிக்கலாம்.

Wikimedia Foundation U4C -க்கு இரண்டு வாக்களிக்க முடியாத உறுப்பினர்களை நியமிக்கலாம் மற்றும் விரும்பிய மற்றும் உரிய ஆதரவு ஊழியர்களை வழங்கும்.

4.3 நடைமுறைகள்

எவ்வளவு அடிக்கடி கூட்டங்கள் கூட்டப்படும் மற்றும் பிற இயக்க நடைமுறைகள் குறித்து முடிவு U4C செய்யும். தங்களின் வரம்பிற்குள் இருக்கும் வரை அவற்றின் நடைமுறைகளை U4C உருவாக்கலாம் அல்லது மாற்றலாம். உரிய சமயத்தில், உத்தேசித்துள்ள மாற்றங்களை செயல்படுத்துவதற்கு முன் அவற்றைப் பற்றிய சமூகக் கருத்தை குழு வரவேற்க வேண்டும்.

4.4 கொள்கை மற்றும் முன்னோடி

U4C புதிய கொள்கையை உருவாக்கவில்லை. UCoC -ஐ திருத்தவோ அல்லது மாற்றவோ முடியாது. அதற்குப் பதிலாக U4C ஆனது UCoC -ஐ அதன் நோக்கத்தால் வரையறுக்கப்பட்டதைப் பயன்படுத்துகிறது மற்றும் செயல்படுத்துகிறது.

சமூகக் கொள்கைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகள் காலப்போக்கில் உருவாகும்போது, முந்தைய முடிவுகள் தற்போதைய சூழலில் பொருத்தமானதாக இருக்கும் அளவுக்கு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

4.5 U4C கட்டமைப்புக் குழு

UCoC அமலாக்க வழிகாட்டுதல்களின் ஒப்புதலுக்குப் பிறகு, பின்வரும் நோக்கங்களுக்காக Wikimedia Foundation ஒரு கட்டமைப்புக் குழுவை ஏற்படுத்தும், இவற்றுக்காக:

  • U4C -இன் நடைமுறைகள், கொள்கை மற்றும் முன்னோடிகளின் பயன்பாட்டை தீர்மானிக்க
  • U4C செயல்முறையின் மீதமுள்ளவற்றை வரைவு செய்ய
  • U4C -ஐ நிறுவுவதற்குத் தேவையான வேறு ஏதேனும் லாஜிஸ்டிக்ஸ்களைக் குறிப்பிட
  • U4C -க்கான ஆரம்ப தேர்தல் நடைமுறைகளை எளிதாக்குவதில் உதவ

கட்டமைப்புக் குழுவில் தன்னார்வ சமூக உறுப்பினர்கள், இணை அமைப்பு ஊழியர்கள் அல்லது குழு உறுப்பினர்கள் மற்றும் Wikimedia Foundation ஊழியர்கள் இருப்பார்கள்.

உறுப்பினர்கள் Wikimedia Foundation -இன் சமூக பின்னடைவு மற்றும் நிலைத்தன்மையின் துணைத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். குழுவிற்கான தன்னார்வ உறுப்பினர்கள் மரியாதைக்குரிய சமூக உறுப்பினர்களாக இருக்க வேண்டும், பின்வரும் திறன்கள் அல்லது பண்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்:

  • கொள்கை வரைவில் அனுபவம்
  • Wikimedia திட்டப்பணிகளில் ஏற்கனவே உள்ள விதிகள் மற்றும் கொள்கைகளைப் பயன்படுத்துவதில் அனுபவம்
  • ஆன்லைனில் ஒத்துழைப்பதில் அனுபவம்
  • பரிவு
  • சர்வதேச அணியில் ஒத்துழைத்த அனுபவம்
  • பங்கேற்பு முடிவெடுத்தல்

கொள்கை வரைவு, Wikimedia திட்டங்களில் ஏற்கனவே உள்ள விதிகள் மற்றும் கொள்கைகளின் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு, மற்றும் பங்கேற்பு முடிவெடுத்தல் போன்ற விஷயங்களில் அனுபவம் கொண்ட இயக்கத்தின் அமலாக்க செயல்முறைகளின் பரந்துபட்ட கண்ணோட்டங்களை உறுப்பினர்கள் கொண்டிருக்க வேண்டும். இயக்கத்தின் உறுப்பினர்கள் பின்வரும் அதன் பன்முகத்தன்மையை பிரதிபலிக்க வேண்டும், ஆனால் அவை மட்டுமே கிடையாது: பேசப்படும் மொழிகள், பாலினம், வயது, புவியியல் மற்றும் திட்ட வகை.

U4C கட்டமைப்புக் குழுவின் பணியானது குளோபல் கவுன்சில் அல்லது இந்த ஆவணத்தின் ஒப்புதலைப் போன்ற ஒரு சமூக செயல்முறை மூலம் அங்கீகரிக்கப்படும். இந்த குழுவின் பணியின் மூலம் U4C நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, கட்டமைப்புக் குழு கலைக்கப்பட வேண்டும்.

5. சொற்களஞ்சியம்

நிர்வாகி (முறைமைச் செயற்படுத்துனர் அல்லது நிர்வாகி): மெட்டாவில் வரையறையைப் பார்க்கவும் மேம்பட்ட உரிமைகள் வைத்திருப்பவர்: வழக்கமான எடிட்டிங் அனுமதிகளுக்கு மேல் நிர்வாக உரிமைகளை வைத்திருக்கும் பயனர், மேலும் பொதுவாக சமூக செயல்முறைகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்லது நடுவர் குழுவால் நியமிக்கப்படுகிறார். இது முழுமையற்ற பட்டியலை உள்ளடக்கியது: உள்ளூர் முறைமைச் செயற்படுத்துனர்கள் / நிர்வாகிகள், செயல்பாட்டாளர்கள், உலகளாவிய முறைமைச் செயற்படுத்துனர்கள், முகமைப் பணியாளர்கள். இணைப்புக் குழு அல்லது Affcom: மெட்டாவில் வரையறையைப் பார்க்கவும்

நடுவர் குழு அல்லது ArbCom: சில சர்ச்சைகளுக்கு இறுதி முடிவெடுக்கும் குழுவாக செயல்படும் நம்பகமான பயனர்களின் குழு. ஒவ்வொரு ArbCom -இன் நோக்கமும் அதன் சமூகத்தால் வரையறுக்கப்படுகிறது. ஒரு ArbCom ஒன்றுக்கு மேற்பட்ட திட்டப்பணிகளுக்கு (எ.கா. Wikinews மற்றும் Wikivoyage) மற்றும்/அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளுக்கு சேவை செய்யலாம். இந்த வழிகாட்டுதல்களின் நோக்கங்களுக்காக, Wikimedia தொழில்நுட்ப இடங்கள் மற்றும் நிர்வாக பேனல்களுக்கான நடத்தைக் குழுவும் இதில் அடங்கும். மெட்டாவில் வரையறையைப் பார்க்கவும் https://meta.wikimedia.org/wiki/Arbitration_Committee

இந்த அமலாக்க வழிகாட்டுதல்களின் நடைமுறைப் பயன்பாட்டிற்கு இந்தக் குழு பணிபுரிவதால், அதன் உறுப்பினர்கள் இயக்கத்தின் அமலாக்க செயல்முறைகளின் பன்முகத்தன்மையுடன் விரிவான அனுபவத்தைப் பெற்றிருக்க வேண்டும்.

Case Review Committee
See definition on Meta-Wiki.

சமூகம்: திட்டப்பணியின் சமூகத்தைக் குறிக்கிறது. திட்டப்பணியின் சமூகத்தால் எடுக்கப்படும் முடிவுகள் பொதுவாக ஒருமித்த கருத்து மூலம் தீர்மானிக்கப்படுகின்றன. இதையும் பார்க்கவும்: திட்டப்பணி. Cross-wiki: ஒன்றுக்கு மேற்பட்ட திட்டப்பணிகளில் பாதிப்பு அல்லது நிகழ்கிறது. இதையும் பார்க்கவும்: குளோபல். நிகழ்வு பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர்: ஒரு நபர் Wikimedia உடன் இணைந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களால் அந்த நிகழ்வின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டவர். குளோபல்: அனைத்து Wikimedia திட்டப்பணிகளையும் குறிப்பிடுகிறது. Wikimedia இயக்கத்தில், "உலகளாவியது" என்பது இயக்கம் முழுவதும் ஆளும் குழுக்களைக் குறிக்கும் ஒரு வாசகச் சொல்லாகும். இது பொதுவாக "உள்ளூர்"-க்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. உலகளாவிய முறைமைச் செயற்படுத்துனர்கள்: மெட்டாவில் வரையறையைப் பார்க்கவும். உயர்நிலை முடிவெடுக்கும் அமைப்பு: ஒரு குழு (அதாவது U4C, ArbCom, Affcom) அதைத் தாண்டி மேல்முறையீடு செய்ய முடியாது. வெவ்வேறு சிக்கல்கள் வெவ்வேறு உயர் மட்ட முடிவெடுக்கும் அமைப்புகளைக் கொண்டிருக்கலாம். அறிவிப்புப் பலகையில் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு கலந்துரையாடலில் பங்கேற்று, அந்தக் கலந்துரையாடலின் முடிவுகளை மேல்முறையீடு செய்ய முடியாவிட்டாலும், முடிவெடுக்கும் பயனர்களின் குழுவை இந்த வார்த்தை உள்ளடக்காது. உள்ளூர்: ஒற்றை Wikimedia திட்டப்பணியைக் குறிப்பிடுகிறது. இந்தச் சொல் பொதுவாக சூழலுக்குப் பொருந்தக்கூடிய மிகச்சிறிய, உடனடி ஆளும் குழுவைக் குறிக்கிறது. wiki-க்கு வெளியே: பொதுவாக Wikimedia Foundation -ஆல் ஹோஸ்ட் செய்யப்படாத ஆன்லைன் இடங்களைக் குறிக்கிறது, Wikimedia சமூக உறுப்பினர்கள் இருந்தாலும், அந்த இடத்தை தீவிரமாகப் பயன்படுத்தினாலும். wiki-க்கு வெளியே உள்ள இடங்களின் எடுத்துக்காட்டுகளில் ட்விட்டர், வாட்ஸ்ஆப், IRC, டெலிகிராம், டிஸ்கார்டு மற்றும் மற்றவை அடங்கும் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்: ஒரு குறிப்பிட்ட நபரை அடையாளம் காணக்கூடிய எந்தவொரு தரவும் ஆகும். ஒரு நபரை மற்றொருவரிடமிருந்து வேறுபடுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் மற்றும் முன்னர் அநாமதேயத் தரவை நீக்குவதற்குப் பயன்படுத்தப்படும் எந்தத் தகவலும் PII என்று கருதப்படுகிறது. திட்டப்பணி (Wikimedia திட்டப்பணி): WMF ஆல் இயக்கப்படும் Wiki.

Recommendation verbs
When drafting the Enforcement Guidelines, the drafting committee considered the words 'encourage', 'may', 'propose', 'recommend', and 'should' as recommendations. Compare this to binding verbs.

மூன்றாம் தரப்பு தளங்களில் ஹோஸ்ட் செய்யப்பட்ட தொடர்புடைய இடம்: தனியார் Wiki -கள் உட்பட, WMF-ஆல் இயக்கப்படாத ஆனால் பயனர்கள் Wikimedia தொடர்பான திட்டப்பணி விஷயங்களைப் பற்றி கலந்துரையாடும் இணையதளங்கள். பெரும்பாலும் Wikimedia தன்னார்வலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.

Staff
Employees of and/or staff members assigned to a Wikimedia movement organization or contractors of such a movement organization whose work requires interaction with Wikimedia community members or in Wikimedia movement spaces (including third-party spaces such as off-wiki platforms dedicated to Wikimedia movement activity).

முகமைப் பணியாளர்: மெட்டாவில் வரையறையைப் பார்க்கவும். அமைப்பு ரீதியான பிரச்சனை: பலரின் பங்கேற்புடன், குறிப்பாக மேம்பட்ட உரிமைகள் உள்ளவர்கள், உலகளாவிய நடத்தை விதிகளைப் பின்பற்றத் தவறிய ஒரு பிரச்சனை.

Wikimedia Foundation Office Action Policy
The policy or its equivalent successor policy.